இஸ்லாமாபாத் இந்து கோயில் கட்ட அனுமதி

பாகிஸ்தான் தலைநகரில் இந்து கோயில் கட்ட அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இஸ்லாமாபாத் இந்து கோயில் கட்ட அனுமதி
x
பாகிஸ்தானில் இந்துக்கள் 90 லட்சம் பேர் வாழ்ந்து வரும் நிலையில் பெரும்பாலான இந்துக்கள் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட கடந்த 2017 ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செக்டார் எச் 9-2-வில் முதற்கட்டமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து 20 ஆயிரம் சதுர அடியில் கோவில் மற்றும் சமூக நலக் கூடம்  உள்ளவை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற சிறுபான்மையினரைப் போல, இந்துக்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்க இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் முன்னதாக அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்