கொரோனா தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்டால் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டாம்" - புதிய வழிகாட்டு நெறிமுறையில் தகவல்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள், இரண்டாம் தடுப்பூசி போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்டால் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டாம் - புதிய வழிகாட்டு நெறிமுறையில் தகவல்
x
 ஃபைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல்முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டதும் தீவிர ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட்டவர்கள், இரண்டாம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசியை இரண்டு முறை போடுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்