2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார், ஜசிந்தா - நாடாளுமன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்

நியூசிலாந்தில் 53வது நாடாளுமன்றம் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியது.
2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார், ஜசிந்தா - நாடாளுமன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்
x
நியூசிலாந்தில் 53வது நாடாளுமன்றம் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியது. தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜசிந்தா ஆர்டெர்ன், இரண்டாவது முறையாக நியூசிலாந்து பிரதமராக பதவி ஏற்றார். மேலும், நியூசிலாந்து தேசிய கீதத்தை அந்நாட்டு கவனர் ஜெனரலுடன் சேர்ந்து பாடிய ஜசிந்தா ஆர்டெர்ன், நாடாளுமன்றத்தை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். அப்போது நியூசிலாந்து நாட்டின் பழங்குடிகளின் மரபு படி, சடங்குகளுடன்  இளைஞர்களின் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்