மன்னருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் - தண்ணீர் பீய்ச்சி அடித்து மக்கள் விரட்டியடிப்பு

தாய்லாந்தில் நடந்த போராட்டத்தில் பொதுமக்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர்
மன்னருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் - தண்ணீர் பீய்ச்சி அடித்து மக்கள் விரட்டியடிப்பு
x
தாய்லாந்தில் நடந்த போராட்டத்தில் பொதுமக்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர். தாய்லாந்து மன்னருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரண்மனைக்கு அருகில் நடந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ராட்சத வேன் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர்.  

பிரான்ஸ் பாய்மர படகு போட்டி - இங்கிலாந்து வீரர் தாம்சன் வெற்றி

பிரான்ஸ் பாய்மர படகு போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பிரபல பிரான்ஸ் பாய்மர படகு போட்டி லெஸ் சாபில்ஸ் கடற்பகுதியில் நடந்தது. 6 வீராங்கனைகள் உள்பட 33 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், இறுதியில் பிரான்ஸ் வீரர் ஜெர்மி பெயு மற்றும் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் தாம்சன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் பிரான்ஸ் பாய்மர தொடரில் வெற்றி பெற்ற முதல் பிரெஞ்சு அல்லாத வீரர் என்ற சாதனையை தாம்சன் படைத்துள்ளார்.





Next Story

மேலும் செய்திகள்