அமெரிக்க தேர்தல் நடப்பது என்ன...? - கவனம் பெறும் நெவாடா மாகாணம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியை நோக்கி பயணித்து வரும் நிலையில், தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.
அமெரிக்க தேர்தல் நடப்பது என்ன...? - கவனம் பெறும் நெவாடா மாகாணம்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரையில் இல்லாத வகையில், இந்த தேர்தலில் 15 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. 10 கோடிக்கும் அதிகமாக தபால் வாக்கு பதிவானதால் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அங்குள்ள 50 மாகாணங்களில் 45 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிவிட்டது. இன்னும் 5 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அமெரிக்க நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரு சபைகளை கொண்டிருக்கின்றன. செனட் சபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 100 ஆகும்.  பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 435 ஆகும். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 538 ஆகும். இதில் மொத்தம் 270 உறுப்பினர்களை பெறும் கட்சியே ஆட்சியில் அமர முடியும்.  

ஆனால், அமெரிக்காவில் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்றால் ஆட்சியில் அமரும் கட்சிக்கு இரு சபையிலும் மெஜாரிட்டியை பெற்றிருக்க வேண்டும். பிரதிநிதிகள் சபையில் மெஜாரிட்டி எண்ணிக்கை 218 ஆகும். இதுவே செனட் சபையில் மெஜாரிட்டி எண்ணிக்கை 50 ஆகும். எனவே இரு சபையிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவது அவசியமாகும். 

தேர்தலில் 264 இடங்களில் வென்று ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். அதிபராக இருக்கும் டொனால் டிரம்ப் பின்னடவை சந்தித்து 214 இடங்களில் வென்றுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் ஜோ பைடன் 204 இடங்களிலும், டிரம்ப் 190 இடங்களிலும் வென்றுள்ளனர்.  பைடனைவிடவும் 14 இடங்களில் பின்தங்கியுள்ளார். செனட் சபையில் இருவரும் சரிசமமாக 48 இடங்களை பிடித்துள்ளனர்.  

மொத்த மெஜாரிட்டியான நோக்கிய பயணத்தில் 264 இடங்களில் வென்றுள்ள பைடனுக்கு இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகிறது.  214 இடங்களை வென்றிருக்கும் டிரம்ப் 56 இடங்களில் வெற்றிப்பெற வேண்டும்.

இன்னும் 5 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து நடக்கிறது. இதில் 6 இடங்களை கொண்டிருக்கும் நவேடாவில் ஜோ பைடன் முன்னிலை பெற்றிருக்கிறார்.  54 இடங்களை கொண்டிருக்கும் பென்சில்வேனியா, நார்த் கரோலினா, ஜார்ஜியா, அலாஸ்கா ஆகிய 4 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்