மகிந்த ராஜபக்ச அரசு பொம்மை போலாகிவிடும் - எம்.பி. சரத் பொன்சேகா

இரு பங்கு பெரும்பான்மையுடன் இருந்த மகிந்த அரசாங்கம், தமது ஆட்சியை பறிகொடுத்ததை நினைக்க வேண்டும் என முன்னாள் ராணுவ தளபதியும் எம்.பி.யுமன சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசு பொம்மை போலாகிவிடும் - எம்.பி. சரத் பொன்சேகா
x
இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள 20-வது சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சிறப்பு பூஜை நடத்தியது. களனி ரஜமகா விகாரையில் நடைபெற்ற வழிபாட்டில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்சேகா, பெரும்பான்மை பலத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைக்கும் கோட்டபய அரசு, ஏற்கனவே 2 மடங்கு பெரும்பான்மையாக இருந்த அரசு கவிழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டும் என பொன்சேகா கூறினார். 20தாவது சட்ட திருத்தத்தின் மூலம், மகிந்த ராஜபக்சவின் அதிகாரம் பறிக்கப்பட்டு பொம்மையாகி விடுவார் என்றும் குறிபிட்டார்.  பொருளாதார தொடக்கம், பொருட்கள், சேவைகள் விலைகள் கூட அதிகரித்து நெருக்கடியில் உள்ள நிலையில், அரசு அதிகாரத்தை கூட்டவும், அவர்களுடைய பங்காளிகளை பலப்படுத்தவுமே முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்