அமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்(MIKE PENCE), பயணம் செய்த விமானத்தின் மீது பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்
x
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்(MIKE PENCE), பயணம் செய்த விமானத்தின் மீது பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், அமெரிக்காவில், தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நியூ ஹாம்ப்ஷயரில் (NEW HAMPSHIRE) தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு துணை அதிபர் மைக் பென்ஸ் கிளம்பும் போது, அவரது விமானம் மீது பறவை ஒன்று மோதியது. இதனையடுத்து அவரது ஏர் போர்ஸ் டூ (AIR FORCE 2) விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், ராணுவ சரக்கு வாகனத்தில் மைக் பென்ஸ் வாஷிங்டன் சென்றார். 


Next Story

மேலும் செய்திகள்