ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் - அமெரிக்க ராணுவ அமைச்சர் அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக மேலும் பல புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் - அமெரிக்க ராணுவ அமைச்சர் அறிவிப்பு
x
வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுக்க அமெரிக்கா அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஈரான் மீதான புதிய பொருளாதார தடையை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளதாக தெரிவித்தார். இங்கிலாந்து , பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இதனை செயல்படுத்தும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்