சீனாவில் பரவும் புருசெல்லோசிஸ் பாக்டீரியா தொற்று - வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகள்

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பிரச்சினையே தீராத நிலையில், அங்கு புதியதாக ஒரு பாக்டீரியா தொற்று ஒன்று பரவ தொடங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
சீனாவில் பரவும் புருசெல்லோசிஸ் பாக்டீரியா தொற்று - வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகள்
x
சீனாவின் கன்சு மாகாணத்தின் தலைநகர் லான்ஷோவில் புருசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா தொற்று பரவுகிறது. இதுவரையில் இந்த தொற்றுக்கு 3,245 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. உடல் தசைகளில் வலி, தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை இந்த தொற்றுக்கான அறிகுறிகளாகும். இந்த புருசெல்லோசிஸ் காய்ச்சல் மிகவும் தீவிரத்தன்மை கொண்டது என்றும் வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட ஆண்களை மலட்டுத்தன்மையடைய செய்யக் கூடும், உடல் உறுப்புக்களை வீக்கமடைய செய்யும் என்றும் ஆய்வுகள் தெரிக்கின்றன. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுவது மிகவும் அரிதானது எனக்கூறும் அறிவியலாளர்கள், விலங்குகளிடம் இருந்து பரவுவதாக தெரிவிக்கின்றனர்

Next Story

மேலும் செய்திகள்