இஸ்ரேல் - ஐக்கிய அரேபிய அமீரகம் இடையே சமாதான உடன்படிக்கை - அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

இஸ்ரேல் நாட்டுக்கும் ஐக்கிய அரேபிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது.
இஸ்ரேல் - ஐக்கிய அரேபிய அமீரகம் இடையே சமாதான உடன்படிக்கை - அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து
x
இஸ்ரேல் நாட்டுக்கும் ஐக்கிய அரேபிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது. பஹ்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் சையானி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, ஐக்கிய அரேபிய அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா பின் சாயித் ஆகியோர், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில், உள்ள வெள்ளை மாளிகையில், நேற்று கையெழுத்திட்டனர். இது மத்தியக் கிழக்கு பகுதியில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். பாலஸ்தீனர்களுக்கான தனி நாடு பிரச்சனையில், இஸ்ரேலுக்கு எதிராக உள்ள அரேபிய நாடுகளில், இரண்டு நாடுகள் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தி கொண்டது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்