இலங்கையில் தீப்பிடித்து எரியும் பனாமா எண்ணெய் கப்பல் - தீயை அணைக்க கப்பல்களை அனுப்பி வைத்த இந்தியா

இலங்கையில் கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தீப்பிடித்து எரியும் பனாமா எண்ணெய் கப்பல் - தீயை அணைக்க கப்பல்களை அனுப்பி வைத்த இந்தியா
x
இலங்கையில், கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பனாமா நாட்டுக்கு சொந்தமான 'நியூ டைமண்ட்' என்ற கப்பல், கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு பயணித்தது. அதில் மாலுமி பொறியாளர்கள் உள்பட 23 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில், அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கு கடல் பகுதியில் அந்தக் கப்பல் தீப்பிடித்தது. சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பேரல்களுடன் எரிவதை அணைக்க ரஷ்ய போர்க்கப்பல் களமிறங்கி உள்ளது. இலங்கையும் போராடி வரும் நிலையில் இந்தியா தனது கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்