அமேசானில் வேகமாக அழிக்கப்படும் வனப்பகுதி - கொரோனா தொடர்பான உயிரிழப்பு அதிகரிக்கும்

அமேசான் காடுகளை அழிப்பதால், கொரோனா பரவலுக்கு ஆளாகி இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என பிரேசிலுக்கு, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமேசானில் வேகமாக அழிக்கப்படும் வனப்பகுதி - கொரோனா தொடர்பான உயிரிழப்பு அதிகரிக்கும்
x
அமேசான் காடுகளை அழிப்பதால், கொரோனா பரவலுக்கு ஆளாகி இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என பிரேசிலுக்கு, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 12 மாதங்களில் அமேசான் காடுகளை அழிக்கும் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். காடுகளை அழிப்பதா​ல் ஏற்படும் புகை, கொரோனா நோயாளிகளை மேலும் பாதிக்கும் என்பதால் பிரேசிலில் உயிரிழப்பு அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே வனங்களை அழிப்பதை தடுக்கும் வகையிலும், தீ பரவலை கட்டுக்குள் கொண்டு வர அதிபர் ஜெயர் போல்சோனரோ அனுப்பிய ராணுவத்தால் பயன் ஏதும் ஏற்பட்டுள்ளதா எனவும் ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்