அதிபர் பதவியை டிரம்ப் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை - முன்னாள் அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு

அதிபர் பதவியை டிரம்ப் தீவிரமாக எடுத்து கொள்ளாததால், அமெரிக்காவில் , ஜனநாயகம் அச்சுறுத்தலை சந்தித்துள்ளதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார்.
அதிபர் பதவியை டிரம்ப் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை - முன்னாள் அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
x
ஜனநாயக கட்சி கூட்டத்தில் பேசிய ஒபாமா அதிபர் டிரம்பின் மோசமான நடவடிக்கையால் உலகமெங்கிலும்  அமெரிக்காவுக்கு கிடைத்து வந்த பெருமை குறைந்து விட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சமீபத்திய கருத்து கணிப்பில் டிரம்பிற்கு 42 சதவீத வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாகவும் , ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடனுக்கு 51 சதவீத வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாகவும் முடிவுகள் வெளியாகி உள்ளன.
6 புள்ளி 4  சதவீத வாக்காளர்கள் தங்களின் ஆதரவு யாருக்கு என இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்