உலகளவில் 1.48 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது, 89 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் 1.48 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு
x
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது, 89 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 6 லட்சத்து 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 63 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் , இந்தியா 3வது இடத்திலும் உள்ளது.


ரூ. 63 லட்சம் கோடி நிதியுதவி திட்டம் - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே உடன்பாடு



கொரோனா தாக்கத்தால் முடங்கியுள்ள ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்க, 63 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி திட்டத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. 27 நாடுகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. கொரோனா பாதிப்பிலிருந்து மீள,  ஐரோப்பிய ஒன்றியத்தின் 149 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அடுத்த 7 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் கடன், நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்படும். பின்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் விதித்த சில நிபந்தனைகள் காரணமாக பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறி ஏற்பட்டு, 5 நாள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.


கொரோனா மருந்து தயாரிப்பில் ஸ்பெயின் - வளரும் நாடுகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி உதவி


கொரோனா வைரஸ் மருந்து தயாரிப்பில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மிக விரைவில் தடுப்பு மருந்து தயாராகி விடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்,  வளரும் நாடுகளின் மருந்து தயாரிக்கும் முயற்சிக்கு ஸ்பெயின் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் கூறுகையில், உலக நாடுகளின் அச்சத்தை போக்கும் வகையில் ஸ்பெயின் தனது பங்களிப்பை செய்துள்ளதாக தெரிவித்தார். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உறுதிபடுத்தும் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.


வெடி பொருட்களுடன் பேருந்தை சிறை பிடித்த நபர் - அதிரடியாக கைது செய்த போலீஸ் 


உக்ரைன் நாட்டின் , LUTSK நகரில் பயணிகள் பேருந்தை மர்ம நபர் ஒருவர் வெடி பொருட்களுடன்  சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் இருந்த பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்து, மிரட்டலில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு பாதுகாப்பு படையினர்,  மர்ம நபரை அதிரடியாக கைது செய்தனர். பிணைக்கைதிகளாக இருந்த 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்


ஹூவாய் வெளியேற்றம் - பிரிட்டன் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு



பிரிட்டனில்  5 ஜி சேவைகளை வழங்குதில் இருந்து ஹூவாய் நிறுவனத்தை வெளியேற்றியதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ பாராட்டு தெரிவித்துள்ளார். பிரிட்டனில், ஹூவாய் நிறுவனம் 2027 ஆம் ஆண்டுக்குள் 5 ஜி சேவைகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும்,  டிசம்பர் மாதத்துக்கு பின்னர் ஹூவாய் கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ பிரிட்டனில்  நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளார். சீனாவுக்கு மேலும் அழுத்தங்களை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  ஹூவாய் நிறுவனம், அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா  தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் - 1250 நாளை எட்டும் போராட்டம் 



இலங்கை வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக, போராட்டம் நடத்தி வருபவர்கள், கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வெளிநாடுகளை எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தனர். இலங்கையில் உள்ள அரசியல் கட்சியினர், தேர்தலுக்காக மட்டுமே அலைவதாக குற்றம் சுமத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்