ஊரடங்கு அமல் - வெறிச்சோடிய புளோரிடா கடற்கரை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தெற்கு கடற்கரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு அமல் - வெறிச்சோடிய புளோரிடா கடற்கரை
x
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தெற்கு கடற்கரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால், கடைகள் மூடப்பட்டன. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 


கனடாவில் திறக்கப்பட்ட 'டிரைவ் இன்' - காருக்குள் இருந்தவாறு துள்ளிக் குதித்த ரசிகர்கள்


கனடாவின் டொரோண்டோ அருகே அன்டாரியோவில் உள்ள டிரைவ் இன் திரையரங்கில், ஏராளமானோர் தங்களது கார்களில் இருந்தபடி இசை நிகழ்ச்சியை ரசித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து, சற்று தளர்வு கிடைத்துள்ள நிலையில், இதுபோன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர்.  


செவ்வாய் நோக்கி புறப்பட்ட யு.ஏ.இ. செயற்கைக் கோள் - 7 மாதங்களில் சென்றடையும் என தகவல்



செவ்வாய் கிரகத்தை நோக்கிய ஐக்கிய அரசு அமீரகத்தின் செயற்கைக் கோள் பயணம் ஜப்பானின் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கி உள்ளது. இதன் மூலம் அந்த நாடு, எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்திருக்காமல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வளர்ச்சி அடைய சாத்தியக் கூறு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. செவ்வாய் தொடர்பான ஆராய்ச்சியில் தற்போது 8 நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், அரபு நாடு ஒன்று இதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக் கோளை துபாயில் உள்ள முகமது ​பின் ரஷித் விண்வெளி மையத்தில் இருந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  ஐக்கிய அரசு அமீரகத்தின் செயற்கைக் கோளை சுமந்து செல்லும் ராக்கெட்,  மணிக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இது 30 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டரை 7 மாதங்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கனமழையால் மூழ்கிய அன்ஹுயி மாகாணம் - முக்கிய ஆறுகளில் பெருவெள்ளம்



கிழக்கு சீனாவின் அன்ஹுயி மாகாணத்தில் உள்ள அனைத்து அணைகளும் கனமழை காரணமாக நிரம்பியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழையால் , YANGTZE மற்றும் HUAIHE ஆறுகளில் நீரின் அளவு அபாய கட்டத்தையும் தாண்டி உயர்ந்து இருக்கிறது. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தீவு போல காட்சி அளிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்