கொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
அமெரிக்காவில் 1.40 லட்சம் புதிய பாதிப்புகள் - தென்னாப்பிரிக்காவில் மதுபான விற்பனைக்கு தடை

உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ - காணாமல் போன 2 தொழிலாளர்கள் 

சீனாவின் ப்யூஜியான் என்னும் இடத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் இருவர் காணாமல் போனதாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழுந்து விட்டு எரிந்த தீயை, தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். 


உண்மையான அயோத்தி நேபாளில் உள்ளது - "ராம பிரான் இந்தியர் அல்ல" நேபாள் பிரதமர் சர்ச்சை பேச்சு 


ராம பிரான், இந்தியர் அல்ல நேபாளத்தை சேர்ந்தவர் என்று நேபாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். 
உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை,
நேபாளில் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நேபாள் பிரதமரின் சர்ச்சை பேச்சு இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.


ஆதவற்றோர் இல்லம் சென்ற மெலானியா டிரம்ப்...முக கவசத்துடன் காட்சியளித்த மெலானியா



கொரோனாவால், வெளியே எங்கும் செல்லாமல் இருந்த அமெரிக்கா அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப், ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டதாக, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தி மேரி எலிசபெத் இல்லத்திற்கு தாம் சென்றதாகவும், அங்குள்ளவர்களிடம் உரையாடியதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர், குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் மெலானியா டிரம்ப், முக கவசத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

போதை, ஆயுத கடத்தல் கும்பலின் புதிய முகம் - 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம்
தலைவரின் 'ஸ்டிக்கர்' ஒட்டி பொருட்கள் விநியோகம்
கடத்தல்காரர்களின் உதவிக்கரத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு கடத்தல்காரர்கள் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தப் பணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்