வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு டிரம்ப் தடை : இந்திய மென்பொறியாளர்களுக்கு பாதிப்பு என தகவல்

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை H 1B விசா உள்ளிட்ட அனைத்து வேலைக்கான விசாக்களையும் நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் நிர்வாக உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு டிரம்ப் தடை : இந்திய மென்பொறியாளர்களுக்கு பாதிப்பு என தகவல்
x
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை  H 1B விசா உள்ளிட்ட அனைத்து வேலைக்கான விசாக்களையும் நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர்  நிர்வாக உத்தரவை பிறப்பித்து உள்ளார். இதனால் 5.25 லட்சம் வேலைகள் அமெரிக்க மக்களுக்கு கிடைக்கும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, அமெரிக்காவை விட்டு நாடு கடத்தும் குற்றங்களை மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் முறைகளை விரைந்து செயல்படுத்தவும், அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ஆண்டுக்கு 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு வழங்க முடியும் என அதிபர் டிரம்ப் கருதுவதாக கூறப்படுகிறது. டிரம்பின் இந்த உத்தரவு இந்திய மென் பொறியாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்