அமெரிக்காவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு - அதிபர் டிரம்ப்
x
உலக அளவில் அதிக பட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமெரிக்க அரசு தவறியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 12 ஆம் தேதியன்று ஈஸ்டர் பண்டிகைக்காக வணிக நிறுவனக்ள் திறக்கப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்,  ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டு கொண்டார்.  மேலும், கொரோனாவால் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இறக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ள அவர், அதிக உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்க சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்