கொரோனா வைரஸ் தொற்று பரவிய வுஹான் நகரில் அந்த நோய் மேலும் பரவாமல் சீனா அரசு கட்டுப்படுத்தியது எப்படி?...

கொரோனா நோய்த்தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனா, பெருமளவில் உள்ள மக்கள் தொகைக்கு மத்தியில், நவீன அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டெழுந்து இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி ஷாங்காய் நகரைச் சேர்ந்த மருத்துவர்கள் விவரமான குறிப்புகளை பதிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவிய வுஹான் நகரில் அந்த நோய் மேலும் பரவாமல் சீனா அரசு கட்டுப்படுத்தியது  எப்படி?...
x
நோய்த்தொற்றை கண்டறிய, மக்கள் திரள் கண்காணிப்பையும், பெருமளவிலான தரவுகளைச் சேகரிக்க சீனா நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளது.

* ஒருவர் குடியிருப்புக்குள் நுழையும் முன், நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள ஃபேஸ் ஸ்கேனருக்கு எதிரே முகத்தை பதிவு செய்துள்ளனர்.

* பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள 20 கோடி சிசிடிவி கேமராக்களைக் கொண்டு, முகம் அறியும் செயலியை கொண்டும்,  மக்கள் திரள் கண்காணிப்பையும், பெருமளவிலான தரவுகளைச் சேகரித்துள்ளனர். 

* சாலையைக் கடக்கும் போதும், வாகனங்களை ஓட்டும் போதும், தெருவோரம் நடமாடும் போதும் சிசிடிவியில் பதிவாகும் முகத்தைக்  கொண்டு அவர் யார், எந்த மாகாணத்தை சேர்ந்தவர் என்ற விவரத்தை அறிந்து கொண்டனர்.

* அத்துடன், 'வாட்ஸ்அப்' போன்ற  'வீசேட்' செயலியைப் பயன்படுத்தி 
அதிலுள்ள உரையாடல்களைக் கொண்டு பெருமளவிலான தரவுகளைச் சேகரித்து மக்கள் திரள் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

* மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று பதிவு செய்தவர்களை பற்றியும், ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல் தளத்திலிருந்து  ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

* ஒரு நபர் கடந்த 14 நாட்களாக சுற்றித் திரிந்த பகுதிகள், சந்தித்த நபர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நோய்த்தொற்று சுயதடைகாப்பு  குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன. 

* அவர் சந்தித்த நபர்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களையும் நோய்த்தொற்று சுயதடைகாப்பில் இருக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டன.

* கொரோனா நோய்த்தொற்றுள்ள நபர்களை மஞ்சள் நிறத்தைக் கொண்டும், நலமுடன் உள்ளவர்களை பச்சை நிறத்தைக் கொண்ட குறியீடுகளைக் கொண்டு அறிந்து கொண்டனர்.

* இந்த இரு நிறங்களைக் கொண்டு நாட்டின் வரைபடத்தை இணைத்துள்ளனர். எந்தப் பகுதியில் பாதிப்பு அதிகம் என்பதை ஒருவர் செல்போனை பயன்படுத்திய தெரிந்துகொள்ள முடியும். 

* பொது வெளியில் மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, நோய்த்தொற்று உள்ளவர்,அதிகபட்சம் வீட்டைத் தாண்டி நோய்த்தொற்று பரவாமல் இருக்க செய்ததாக கூறியுள்ளார்.

* இந்த முறையில் தான் கொரோனா என்ற பெரும் தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறுகின்றனர் சீனாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள்.

Next Story

மேலும் செய்திகள்