கொரோனா பரவலை தடுக்க சாலையில் 500 சிங்கங்களை உலவ விட்டுள்ளாரா புதின்?

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும், காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
கொரோனா பரவலை தடுக்க சாலையில் 500 சிங்கங்களை உலவ விட்டுள்ளாரா புதின்?
x
சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும், காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது...? இதோ உதாரணத்துக்கு.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை கண்டிராத அவசர நிலையை உலக நாடுகள் சந்தித்துள்ளன. அதிலிருந்து நமது நாடும் தப்பவில்லை. கொரோனா பரவலை தடுக்க ஒரே வழி, வீட்டிற்குள்ளேயே இருப்பது தான் என்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசின் எச்சரிக்கையை அலட்சியமாக எடுத்துக் கொண்டு ஒரு சிலர் செயல்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது. 

இப்படி சொல் பேச்சு கேட்காதவர்களுக்காக, ரஷ்ய அதிபர் புதின் அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தீயாக பரவி வருகிறது. மக்கள் வெளியே வராமல் தடுக்க, 500க்கும் மேற்பட்ட சிங்கங்களை, ரஷ்ய அரசு சாலையில் உலாவ விட்டிருப்பதாக திகிலூட்டுகிறது, இந்த புகைப்படம். சாலையில் மக்கள் நடமாடுவதை தவிர்க்க இப்படியுமா ஒரு அரசு செய்யும் என சந்தேகம் எழுந்தது. இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த போது, இது தவறான தகவல் என தெரிய வந்துள்ளது. சாலையில் சிங்கங்கள் உலா வரும் இந்த இடம் ரஷ்யாவே அல்ல..இது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரம். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு சினிமா படப்பிடிப்பின் போது சாலையில் சிங்கங்கள் உலா வருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம், இது. ஆக, வீடுகளை விட்டு மக்கள் வெளியே வராமல் இருக்க ரஷ்ய அதிபர், சிங்கங்களை சாலையில் கட்டவிழ்த்து விட்டுள்ளார் என உலா வரும் தகவல் உண்மையல்ல..



Next Story

மேலும் செய்திகள்