கொரோனா - இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது..
கொரோனா - இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு
x
கொரோனா வைரசால் சுமார் 150 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 32ஆக உயர்ந்துள்ளது. மேலும் இத்தாலியில் 47 ஆயிரத்து 21 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்