அமெரிக்க அதிபரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் - டிரம்ப், மோடி உருவப்படங்களுடன் வரவேற்பு பதாகைகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையையொட்டி குஜராத்தில் ஏராளமான வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் - டிரம்ப், மோடி உருவப்படங்களுடன் வரவேற்பு பதாகைகள்
x
அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையையொட்டி குஜராத்தில் ஏராளமான வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்,அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகிய இருவரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகின்றனர். அவர்கள் டெல்லி மற்றும் அகமதாபாத் நகருக்கு செல்கின்றனர். கடந்த ஆண்டு  மோடி அமெரிக்கா சென்ற போது ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி போல அகமதாபாத்தில்  "கேம் ச்சோ டிரம்ப்" என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து விழா நடைபெறும் மைதானம் எதிரே டிரம்ப் மற்றும் மோடி உருவப்படங்களுடன் நமஸ்தே ட்ரம்ப் என்ற வரவேற்பு வாசகங்கள்  வைக்கப்பட்டுள்ளன. நகரில் ஏராளமான கட்  அவுட்களும் காணப்படுகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்