ரோஹிங்யா இனப்படுகொலை - காம்பியா குற்றச்சாட்டு

மியான்மரில் ரோஹிங்யா இன முஸ்லீம்கள் படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் பிரதிநிதியாக ஆங் சான் சூச்சீ ஆஜாராகி விளக்கம் அளித்தார்.
ரோஹிங்யா இனப்படுகொலை - காம்பியா குற்றச்சாட்டு
x
அமைதிக்கான  நோபல் பரிசு பெற்ற தலைவரான ஆங் சான் சூச்சி, அந்த நாட்டில்  நடக்கும் படுகொலையை கண்டுகொள்ளவில்லை என தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் முஸ்லிம்கள் அதிகம் கொண்ட நாடான காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை எதிர்கொள்ள மியான்மர் சார்பில், அந்நாட்டு அரசாங்கமும், ராணுவமும் தயாரான நிலையில், தானே ஆஜராகவதாக  ஆங் சான் சூச்சி தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில், நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் சூச்சி ஆஜராகி தனது முதற்கட்ட வாதங்களை எடுத்துவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே மியான்மர் இனப்படுகொலைகள் தொடர்பாகவும், ஆங் சான் சூச்சிக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்