இலங்கை அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - சஜித் பிரேமதாச முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - சஜித் பிரேமதாச முன்னிலை
x
இலங்கையில் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.  அதிபர்  தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

நேற்று நாடு முழுவதும் 12 ஆயிரத்து 845 வாக்கு சாவடிகளில் சுமார் ஒன்றரை கோடிக்கும்  மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர். நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. 

அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை ஐந்தே கால் மணி முதல் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. 

சஜித் பிரேமதாச 50.35 சதவீத வாக்குகள் பெற்று தற்போது  முன்னணியில் உள்ளதாகவும்,  கோத்தபய ராஜபக்சவை விட சுமார் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதாகவும் 
தகவல் வெளியாகியுள்ளது.

42.21 சதவீத வாக்குகள் பெற்று கோத்தபய ராஜபக்சே இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்