கடலில் தன்னந்தனியே உலா வந்த 77 வயது பாட்டி - உலக சாதனை படைத்து பிரிட்டிஷ் மூதாட்டி அசத்தல்

பிரிட்டிஷ் நாட்டின் 77 வயது மூதாட்டி JEANNE SOCRATES என்பவர் படகில் 330 நாட்கள் உலகை வலம் வந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
கடலில் தன்னந்தனியே உலா வந்த 77 வயது பாட்டி - உலக சாதனை படைத்து பிரிட்டிஷ் மூதாட்டி அசத்தல்
x
பிரிட்டிஷ் நாட்டின் 77 வயது மூதாட்டி JEANNE SOCRATES என்பவர், படகில் 330 நாட்கள் உலகை வலம் வந்து, புதிய சாதனை படைத்துள்ளார். கனடாவின் விக்டோரியா முனையத்தில் இருந்து 11 மீட்டர் படகில் புறப்பட்டார். தன்னந்தனியாக - யாருடைய உதவியும் இல்லாமல், படகில் உலகை வலம் வந்த இந்த மூதாட்டி, பின்னர் புறப்பட்ட இடத்திற்கே பத்திரமாக திரும்பி வந்தார். கரையில் அவரது நண்பர்களும் உறவினர்களும் கூடி, சாதனை மூதாட்டிக்கு வரவேற்பு கொடுத்தனர். கடலில் படகு மூலம் தன்னந்தனியாக உலா வந்து, இவர், புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்