காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உதவத் தயார் - டொனால்டு டிரம்ப்

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உதவத் தயார் - டொனால்டு டிரம்ப்
x
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார். வாஷிங்டன்- வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியா, பாகிஸ்தான் இடையே சற்று பதற்றமும், பரபரப்பும் நிலவுதாக குறிப்பிட்டார்.  இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் நட்புறவில் இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், இரு நாடுகளும் விரும்பினால், உதவி செய்ய தயார் என கூறினார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நிலையை திட்டவட்டமாக தெளிவு படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்