எல்சால்வடார் நாட்டில் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிராக பெண்கள் போராட்டம்

எல்சால்வடார் நாட்டில் கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதமாக உள்ள நிலையில் இளம்பெண் ஒருவர் அந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்சால்வடார் நாட்டில் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிராக பெண்கள் போராட்டம்
x
எல்சால்வடார் நாட்டில் கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதமாக உள்ள நிலையில், இளம்பெண் ஒருவர் அந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பல் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த, இந்த சம்பவம் தொடர்பாக தற்போது  கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை  விடுதலை செய்ய வேண்டும் என அட்டார்னி ஜெனரல் அலுவலகம் முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  சிவப்பு வண்ண சாயங்களை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கருக்கலைப்பு குற்றத்துக்கு எல்சால்வடாரில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்