பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு மற்றும் அங்கு வன்முறையை தூண்டிவிடுவதை அனுமதிக்க கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக  பிரான்ஸ்  சென்ற பிரதமர் மோடிக்கு, பாரீஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் உயர் அதிகாரிகளும்,  அந்நாட்டு வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை, மோடி சந்தித்தார். இருவரும் பழமையான சாண்டலி அரண்மனையை சுற்றி பார்த்தனர். இதைதொடர்ந்து இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரான்ஸ் அதிபர், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு மற்றும் அங்கு வன்முறையை தூண்டிவிடுவதை அனுமதிக்க கூடாது என்று கூறினார். 

ஐக்கிய அமீரகம், பக்ரைனுக்கும் பிரதமர் சுற்றுப்பயணம் 

பிரான்ஸ் பிரதமர் எடோவர்ட் சார்லஸ்  பிலிப்பை இன்று சந்தித்து பேசும் பிரதமர் மோடி,  இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பாரீசில் வாழும் இந்தியர்களிடையே உரையாற்றும் பிரதமர் மோடி,  ஐக்கிய அமீரகத்துக்கு புறப்பட்டு செல்கிறார். இதைதொடர்ந்து பக்ரைன் செல்லும் பிரதமர் மோடி வரும் 25 ந்தேதி பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார். அந்த அமைப்பில் இந்தியா அங்கம் வகிக்கா விட்டாலும்,   நட்பு நாடு என்ற முறையில் அழைப்பு விடுக்கப்பட்டதால் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்