இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் எதிரொலி : நாடு திரும்ப அச்சப்படும் அகதிகள்

இன்று சர்வதேச அகதிகள் தினம்... இலங்கையில் போரின்போது இந்தியாவுக்கு வந்த தமிழ் அகதிகள், நாடு திரும்ப இருந்த நிலையில், அங்கு சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் எதிரொலி : நாடு திரும்ப அச்சப்படும் அகதிகள்
x
இன்று சர்வதேச அகதிகள் தினம்.... பிறந்த மண், ஓடியாடி விளையாடிய இல்லம், படித்த பள்ளி,  பெற்றோர், உற்றார், உறவினர் உள்ளிட்டோரை விட்டு வேறு நாடுகளில் எராளமானோர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதை நினைவுகூரும் நாள்தான், சர்வதேச அகதிகள் தினம். 

இலங்கையில் விடுதலை புலிகள் - ராணுவம் இடையே போர் தீவிரமடைந்தபோது, உயிரை பாதுகாத்து கொள்ள சிறுக சிறுக சேமித்த சொத்துக்களை விட்டு விட்டு ஏராளமானோர் கையில் கிடைத்த பொருள்களுடன் காடுகளில் மறைந்து கடல் பயணம் மேற்கொண்டு தமிழகம் வந்தனர். 

அவர்கள் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  

அவர்களுக்கு தேவையான உணவு உடை உள்ளிட்டவை தமிழக அரசு வழங்கி வருவதுடன், குடும்ப தேவைக்காக குடும்பத் தலைவர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதமும், குடும்பத்தலைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் வீதமும் வழங்கப்பட்டு வருகிறது. 

இறுதி போர் முடிந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் நாடு திரும்பலாம் என அகதிகள் திட்டமிட்டிருந்தனர். 

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதனால் நாடு திரும்பலாம் என திட்டமிட்டிருந்த அகதிகள் தங்கள் முடிவை கைவிட்டுள்ளனர்
 
தமிழர் வசிக்கும் பகுதிகளில் இலங்கை உளவுப்பிரிவினர் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், இதனால் நாடு திரும்ப வேண்டாம் என உறவினர்கள் கூறுவதாகவும் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாடு திரும்பும் கனவை மறந்து தமிழகத்திலேயே இருக்கலாம் எனவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். உயிருடன் இருந்தால் எப்போதாவது தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்திக்கலாம் என மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்