இலங்கை : சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது - பொருளாதார நிபுணர்கள்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால், சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
இலங்கை : சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது - பொருளாதார நிபுணர்கள்
x
இலங்கையில், 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, அதன் பொருளாதார வளர்ச்சி சீரடைந்தது. சுற்றுலா துறை, தேயிலை ஏற்றுமதி, ஆடைகள் ஏற்றுமதி, விவசாயம் ஆகியவை இலங்கை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய துறைகள் ஆகும். 2009ம் ஆண்டில் 3 புள்ளி 4 சதவீதமாக இருந்த அதன் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 2010ம் ஆண்டில் 8 சதவீதமாக வளர்ச்சி பெற்றது. அதன் பிறகு 2011 மற்றும் 2102-ம் ஆண்டுகளிலும் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி,  ஏறுமுகத்துடனே காணப்பட்டது. 2011ம் ஆண்டில் 8 புள்ளி 4 சதவீதமாகவும், 2012ம் ஆண்டில் 9 புள்ளி 1 சதவீதமாகவும் இருந்தது. அதன் பிறகு இலங்கையின் அரசியல் சூழல் மற்றும் புதிய பொருளாதார கொள்கையினால் அதன் பொருளாதார வளர்ச்சியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. 2015ஆம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகவும், 2017 ஆம் ஆண்டில் 3 புள்ளி 3 சதவீதமாகவும் 2018ம் ஆண்டில் 3 புள்ளி 9 சதவீதமாகவும் சரிவடைந்தது. தொடர் குண்டு வெடிப்புகளினால், இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகள், இலங்கையில் செய்யும் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஆர்டர்களில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்