இலங்கையில் அவசரநிலை பிரகடனம் : மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமல் - சமூகவலை தளங்களை முடக்கவும் உத்தரவு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் : மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமல் - சமூகவலை தளங்களை முடக்கவும் உத்தரவு
x
இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலால், அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை இரவு நேர அவசரநிலை பிரகடனம் என்னும் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் பிறப்பித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொழும்புவில் போதுமான அளவுக்கு பாதுகாப்பு படையினர் இல்லாததால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 23-ம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றம் கூட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்