பிரட்டன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி : தப்பி பிழைத்தது பிரதமர் தெரசா மே-வின் ஆட்சி

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
பிரட்டன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி : தப்பி பிழைத்தது பிரதமர் தெரசா மே-வின் ஆட்சி
x
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  பிரதமர் தெரசா  மே தரப்பு தோல்வி அடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா அரசு மீது நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, தமது அரசால், 34 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். தெரசா மே அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் ஜெர்மி கார்பின் குறிப்பிட்டார். இரு தரப்பு விவாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 306 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் பதிவாகியது. இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. 20 வாக்குகள் வித்தியாசத்தில் தெரசா மே தலைமையிலான ஆட்சி தப்பி பிழைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்