உலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.61 லட்சம் கடன்

சராசரியாக உலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் 61 லட்ச ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது
உலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.61 லட்சம் கடன்
x
சர்வதேச அளவில் நாடுகள் வாங்கியுள்ள கடன் இதுவரை இல்லாத வகையில் 184 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாகவும், இதில் பாதிக்கு மேற்பட்ட கடன்களை அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் வாங்கியுள்ளதாகவும்  சர்வதேச நிதியம் கூறியுள்ளது. சராசரியாக உலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் 61 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும், ஒருவரது வருமானத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக கடன்  உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடன் வாங்குவதில் சீனா தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும் சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்