செல்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த மைல்கல் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள 'மடங்கும் செல்போன்'

தேவைக்கு ஏற்றாற் போல் மடங்கும் வசதி கொண்ட செல்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
செல்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த மைல்கல் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள மடங்கும் செல்போன்
x
Tab போன்ற வடிவத்தில் இருக்கும் இதனை விரும்பும் வடிவத்திற்கு ஏற்றாற் போல் மடித்து, செல்போனாகவும் பயன்படுத்தலாம். இதற்காக இன்பிநிட்டி பிளக்ஸ் டிஸ்பிளே என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போனை எப்படி வேண்டுமானாலும் மடக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பத்தில் பிரச்சினை இல்லாமல் இயங்கக் கூடிய செயலிகளை உருவாக்குமாறு, செயலி மேம்பாட்டாளர்களை சாம்சங் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. செயலிகளை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன், இந்த 'மடங்கும் போன்' விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நெருப்பிலும் வேலை செய்யும் செல்போனை, சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்