சிரிக்க சிரிக்க சீஸ்ரோல் போட்டி!

இங்கிலாந்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி...
சிரிக்க சிரிக்க சீஸ்ரோல் போட்டி!
x
சீஸ் ரோல் என்றால் உள்ளே சீஸ் வைத்து உருட்டி செய்யப்படும் உணவு என நினைப்பீர்கள். அதுதான் இல்லை... இது இங்கிலாந்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி...

குழந்தைகள் விரும்பும் பால் பொருளான சீஸை ஒரு சக்கர வடிவில் செய்து அதனை கூப்பர் ஹில் எனும் மலைப்பகுதியில் இருந்து உருட்டி விடுவார்கள். பின்னாலேயே அந்த சீஸை விரட்டிச் சென்று பிடிப்பார்கள் போட்டியாளர்கள். பார்க்க காமெடியாகத் தெரிந்தாலும் இது ஒரு வீர விளையாட்டுதான். இந்தப் போட்டியின் போது தலை குப்புற உருண்டு சிலர் மரணம் வரை கூட போவதுண்டு. ஆனாலும், போட்டியாளர்களின் திறமையை சோதிப்பதற்காக உருவாக்கப்பட்ட போட்டியல்ல இது. எப்படி உருட்டினாலும் உடையாமல் சிதறாமல் எங்கள் ஊர் சீஸ் எத்தனை தரமாக இருக்கிறது பாருங்கள் என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் மெசேஜ். இதற்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள் போட்டியாளர்கள்.

Next Story

மேலும் செய்திகள்