ஜல்லிக்கட்டு போட்டியை யார் துவக்கி வைப்பது? திமுக - அதிமுகவினர் இடையே போட்டி

x

ஜல்லிக்கட்டு போட்டியை யார் துவக்கி வைப்பது?

திமுக - அதிமுகவினர் இடையே போட்டி


புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் யார் தொடங்குவது என்ற பிரச்சனையால் ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் துவங்கியது...


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் போட்டியை தொடங்க வேண்டுமென அதிமுகவினரும், அமைச்சர் ரகுபதி தான் போட்டியை தொடங்க வேண்டுமான திமுகவினரும் பிடிவாதம் பிடித்ததால் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 8.10க்கு கோவில் காளை அவிழ்க்கப்பட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்...


அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்த பின்பு தான் போட்டியை தொடங்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது... அவருடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் 8.25 மணிக்கு விஜயபாஸ்கர் விழா மேடைக்கு வந்துள்ளார்... அப்போது அங்கு இருந்த திமுக மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் உள்ளிட்டோர் அமைச்சர் ரகுபதி வரும் வரை போட்டியை தொடங்கக்கூடாது என விழா கமிட்டியிடம் தெரிவித்தனர்... இதனால் போட்டி துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது... பின்னர் ஒன்றரை மணி நேரம் கழித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 9.30 மணிக்கு போட்டி துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது...


Next Story

மேலும் செய்திகள்