திருவள்ளூரில் இருந்து கிளம்பிய 5000 பேர்... நெடுஞ்சாலையில் வரிசையாக நின்ற வாகனங்கள் - திக்குமுக்காட வைத்த அதிமுக மாநாடு

x

அதிமுக மாநாட்டிற்கு புறப்பட்ட வாகனங்களால் மீஞ்சூர் -நெமிலிச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டில், பங்கேற்பதற்காக, பொன்னேரி பகுதியிலிருந்து 5 ஆயிரம் பேர் சோழவரத்திலிருந்து புறப்பட்டனர். இதற்காக, மீஞ்சூர் -நெமிலிச்சேரி ஆறுவழிச்சாலையில் அதிமுகவினரின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிமுகவினரின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றதும் போக்குவரத்து சீரானது.


Next Story

மேலும் செய்திகள்