திருப்பூரில் துணி வியாபாரம்.. ரூ.30 லட்சத்தை அமுக்கிய நெல்லை ஜோடி

x

திருப்பூரில் துணி வியாபாரம் செய்வதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியிடம் இருந்து, 35 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.

திருப்பூரை சேர்ந்த பழனியாம்மாள் என்பவர், சுரேஷ் மற்றும் சென் பியூலா என்ற தம்பதி மீது காவல் நிலையத்தில் பணமோசடி புகாரளித்தார். துணி வியாபாரத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தி 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பதுங்கியிருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்த நிலையில், தம்பதியினர் வேறு சிலரிடமும் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு வங்கிகளில் அடமானத்தில் இருந்த 35 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்