சென்னையில் தடம் புரண்ட ரயில் இரவில் நடந்த பரபரப்பு

x

சென்னையில் சரக்கு ரயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து தண்டையார்பேட்டை சரக்கு கிடங்கிற்கு சென்ற சரக்கு ரயில், சரக்கு கிடங்கை நெருங்கும்போது தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் தண்டவாளத்தை தற்காலிகமாக சரி செய்து, சரக்கு ரயிலை கிடங்கிற்குள் எடுத்து சென்றனர். பின்னர், தண்டவாளத்தை சரி செய்யும் பணி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்