ஈபிஎஸ் கூறியதாக பரவும் செய்தி - டிடிவி தினகரன் கொடுத்த உடனடி ரியாக்‌ஷன்

x

ஒருசிலரின் வியாபார நிறுவனமாக அதிமுக மாறியுள்ளதாக அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சித்ரா பௌர்ணமியையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற டிடிவி தினகரன், கடலில் புனித நீராடி, பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக் கணிப்புகளுக்கு பதில், மக்களுடைய கருத்தை ஜூன் 4ஆம் தேதி தெரிந்துகொள்ளலாம் என்றார். அதிமுகவை அபகரித்து வைத்துள்ளவர் எல்லாம் தலைவர் ஆகிவிட முடியாது என்று எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்