நகைகள் கொள்ளை புகார்... 9 பேரை ஜெயிலுக்கு அனுப்பிய தம்பதி.. மிரட்டி பணம் பறித்ததாகத் வழக்கில் கைது

x

தஞ்சாவூர் மாவட்டம் புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன் - வேம்பு தம்பதியினர், தங்களை ஒரு கும்பல் தாக்கி 15 பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக புகாரளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 9 பேரை கைது செய்தனர். இதனிடையே சீனிவாசன் என்ற நபர், உதயசந்திரன் - வேம்பு தம்பதியினருக்கு கடன் வழங்கியிருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடனை கேட்டு அவர், உதயசந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உதயசந்திரன், நீ என் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாக வெளியே கூறி விடுவேன் என மிரட்டியதோடு, அவரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரில், உதயசந்திரன் - வேம்பு தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்