"மகிழ்ச்சி" பெயரை நம்பி ஏமாந்த மக்கள் - முக்கிய புள்ளிக்கு செக் வைத்த போலீசார்

x

60 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிதி நிறுவனத் தலைவர் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் "மகிழ்ச்சி" என்ற நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் கூடுதல் வட்டி தரப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்ட நிலையில், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்நிறுவனத்தில் 60 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்... கடந்த ஆண்டு திடீரென இந்த நிதி நிறுவனத் தலைவர் தலை மறைவாகி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிதி நிறுவன தலைவரான ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த சிவகுமாரை தற்போது போலீசார் கைது செய்து மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு குற்ற தடுப்பு நீதிமன்றத்தில் சிவகுமாரை ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்