ரூ.30-க்கு ரூ.5 லட்சம் இன்சுரன்ஸா? வாயை பிளந்த சேலம் மக்கள்.. கடைசியில் காத்திருந்த பெரும் ஷாக்

x

ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் நிலையில், அதற்கான கேஒய்சி ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளை தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இந்நிலை யில் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம், வாழப்பாடியில் கே.ஒய்.சி ஆவண சரிபார்ப்பு பணியை கல்லூரி மாணவர்களை கொண்டு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் 3,000 பேரிடம் 30 ரூபாய் வழங்கினால் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதாக கூறி ஆவணங்களை பெற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் உட்பட அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் வசூல் செய்த பணத்தை பொதுமக்களிடம் திரும்ப அளிக்க உத்தரவிட்டனர்


Next Story

மேலும் செய்திகள்