அடுத்தடுத்து போராட்டத்தில் குதித்த பாமகவினர்...1200 பேர் கைது...உச்சகட்ட பரபரப்பு...!

x

நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாக 1200 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

சேலம்

நெய்வேலியில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் வன்னியர் சங்க மாநில பொது செயலாளர் டி.கே. ராஜா தலைமையில், பாமகவினர் சாலையில் கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டி.கே. ராஜா சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

தாம்பரம்

அன்புமணி ராமதாஸ் கைதினை கண்டித்து பாமகவினர், தாம்பரம் பஸ் நிலையம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென ஜி.எஸ்.டி சாலையில் படுத்து, மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்

வாணியம்பாடி, திருப்பத்தூர்

வாணியம்பாடி பேருந்து நிலைய பகுதியில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டயர்களை கொளுத்தி சாலையில் வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது. கொளுத்தப்பட்ட டயர்களை போலீசார் அணைத்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்