`அதிமுக மீது பாஜகவுக்கு ஒன்சைட் லவ்' - குமுறிய ஓபிஎஸ்ஸின் மனசாட்சிகள்

x

தமிழகத்தில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் பங்கேற்காத நிலையில், அதிமுகவுடனான கூட்டணி முயற்சியை பாஜக தொடர்கிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

vovt

தூத்துக்குடி, நெல்லையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பாஜகவின் மற்ற கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.

இதனால், ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் பாஜகவால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கி இருக்கிறார்கள்

இந்நிலையில், ஒன்றிரண்டு இடங்களுக்கு கையேந்தி காத்திருப்பவர்களாக ஓபிஎஸ், தினகரனை பிம்பப்படுத்தும் திட்டம் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தால் தங்கள் வாக்கு வங்கி

3% இருந்து 6% ஆக உயர்ந்துவிட்டதாக கற்பனையில் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக மீதான ஒருதலைக் காதலை பாஜக இன்னும் கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

ஓ.பி.எஸ், தினகரன் ஆகியோரை தவிர்ப்பதன் மூலம் இன்னும் அதிமுக உடனான கூட்டணி முயற்சியை பாஜக தொடர்கிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்