வரலாற்று சாதனை படைத்த நெல்லை அரசு மருத்துவர்கள் - 80 நாள் போராட்டம்.. "அவங்களுக்கு அடுத்து நாம தான்"

x

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேல் செயற்கை சுவாசத்தில் இருந்த இளைஞரை குணப்படுத்தி நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், குயில்லன் பாரே(Guillain-Barre) என்ற அரிய வகை நோயால் கை கால்கள் செயலிழந்து, சுவாசிக்க சிரமப்பட்டார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய குழுவை நியமித்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 80 நாட்களுக்கு மேலாக வழங்கிய உயர்தர சிகிச்சையின் பயனாக, கிருஷ்ணமூர்த்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார். 80 நாட்களாக செயற்கை சுவாசத்தில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியது வரலாற்று சாதனை என மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்