தூத்துக்குடி மாவட்டத்தில் விசிட் அடித்த MP..கண்பார்வை சிகிச்சைக்கு உதவி கேட்ட சிறுமி.

x

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்த இடத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி கருணாநிதி, மருத்துவச் சிகிச்சைக்கு உறுதியளித்தார். திருச்செந்தூர் அருகே உள்ள சொக்கப்பழங்கரை கிராமத்தில் வெள்ள பாதிப்பை அவர் ஆய்வு செய்தபோது, கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்டு, அவரிடம் சென்று விசாரித்தார். தனது பெயர் ரேவதி என்றும், ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறிய அந்த சிறுமி, கண் பார்வை பிரச்சனைக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழியிடம் கூறினார். அந்த மாணவியிடம், உடனடியாக கண் மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கனிமொழி உறுதியளித்தார்


Next Story

மேலும் செய்திகள்