"உடனே தமிழக அரசிடம் ஒப்படையுங்கள்... மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x
  • 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது...
  • கீழடியில் நடைபெற்ற 2 கட்ட அகழாய்வில் 2 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான, 5000-த்துக்கும் அதிகமான பழங்கால பொருட்கள் மத்திய அரசிடம் உள்ளதாகவும்,
  • அதனை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்து அங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
  • இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார், கங்க பூர்வாலா மற்றும் தனபால் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  • அப்போது வழக்கறிஞர் கனிமொழி மதி, கீழடியில் மத்திய அரசு அகழாய்வு செய்த போது கிடைத்த 5000க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்,
  • கீழடி அகழாய்வு பணிகளை கண்காணித்து மேற்கொள்ள அதிகாரியாக அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமனம் செய்யவேண்டும் என வாதிட்டார்.
  • இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கீழடி 2 கட்ட அகழாய்வில் மொத்தம் 5,765 பொருட்கள் கிடைத்தாகவும், அவை அனைத்தும் இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் சென்னை அலுவலகத்தில் உள்ளதாகவும் கூறினார்
  • பின்னர், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்....

Next Story

மேலும் செய்திகள்