தூத்துக்குடி வெள்ளத்தில் கர்ப்பிணிக்கு தண்ணீரில் நின்று பிரசவம் - செவிலியர் சொன்ன உருக்கமான தகவல்

x

கனமழை வெள்ளத்தின் போது தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் காது கேளாத வாய் பேச முடியாத ரம்யா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு முட்டியளவு தண்ணீரில் நின்று பிரசவம் பார்த்தது மெய்சிலிர்க்க வைத்தாக அம்மருத்துவமனை செவிலியர் ஜெயலட்சுமி உருக்கமாக தெரிவித்துள்ளார். நிறை மாத கர்ப்பிணியான ரம்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்க முடியும் என்ற நிலை

இருந்ததாகவும், மழை வெள்ளம் மருத்துவமனைமனையை சூழ்ந்ததால்

வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் செவிலியர் ஜெயலட்சுமி கூறினார். நேரம் ஆக ஆக அதிக தண்ணீர் சூழ்ந்ததால் முட்டி அளவு தண்ணீரில் நின்றபடி ரம்யாவுக்கு பிரசவம் பார்த்து அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும் செவிலியர் ஜெயலட்சுமி தெரிவித்தார். ஆபத்தான மழை வெள்ளத்திலும் சுகப்பிரசவம் செய்து தாயும், பச்சிளம் குழந்தையும் நலமாக அனுப்பி வைத்ததற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்

என்றும் செவிலியர் ஜெயலட்சுமி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்