போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த குட்டீஸ்-"இதுக்கு ஒரு முடிவு வேணும் எங்களுக்கு"-அதிர்ச்சியில் போலீசார்

x

சென்னை, அசோக் நகர் காவல் நிலையத்தை சிறுவர்கள் சுற்றிப் பார்த்தனர். தனியார் பிளே ஸ்கூலைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் அசோக் நகர் காவல் நிலையத்தைச் சுற்றிப் பார்த்தனர். சிறுவர்களை வரவேற்ற ஆய்வாளர் பாலன், காவல் நிலையத்தை அவர்களுக்கு சுற்றிக் காண்பித்தார். இதைத் தொடர்ந்து, ஏதாவது புகார் இருக்கிறதா எனக் காவலர்கள் கேட்ட போது, தங்கள் விளையாட்டு பொருள்களைக் காணவில்லை என சிறுவர்கள் குறும்பாக கூறினர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்